×

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு : முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ் பங்கேற்பு!!

தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றுக்கொண்டார். சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பதவியேற்பு விழா தொடங்கியது. ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் , தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் திமுக அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதவியேற்பதற்கு முன்பாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட நிலையில், இதையடுத்து தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆளுநர் பதவியேற்பு நிகழ்வில்
 

தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றுக்கொண்டார்.

சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பதவியேற்பு விழா தொடங்கியது. ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் , தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் திமுக அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதவியேற்பதற்கு முன்பாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட நிலையில், இதையடுத்து தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

ஆளுநர் பதவியேற்பு நிகழ்வில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி பங்கேற்றனர். சபாநாயகர் அப்பாவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஜி.கே. வாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ப்ரோட்டோ கால் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு 8ஆவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. தமிழ்நாட்டின் ஆளுநராக புதிதாக பதவியேற்றுக்கொண்ட ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் புத்தகங்களை வழங்கி வாழ்த்து கூறினார்.