×

தொழில்நிறுவனங்களுக்கு விரைவாக அனுமதி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு தேவையான நிலங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. தமிழகத்துக்கு அதிக தொழில் முதலீடுகளை கவரும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. சமீபத்தில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற, உயர்மட்ட கண்காணிப்பு குழுவில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த குழுவின் முதல் கூட்டம் ஊரடங்கு அறிவித்த சில நாட்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக மாநில
 

தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு தேவையான நிலங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. தமிழகத்துக்கு அதிக தொழில் முதலீடுகளை கவரும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற, உயர்மட்ட கண்காணிப்பு குழுவில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த குழுவின் முதல் கூட்டம் ஊரடங்கு அறிவித்த சில நாட்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக மாநில அரசின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் , தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் 26 திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ரூ. 25 ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழகத்தில் கேற்கொள்ளப்பட உள்ளன. சுமார் 49 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் இதன் மூலம் உருவாகும் என எதிர்பார்ப்பு உள்ளது.

காற்றாலை மற்றும் மாற்று எரிசக்தி துறையில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதலமைச்சர் தலைமையில் நடைந்த இந்த கூட்டத்தில், வருவாய் துறை வசம் உள்ள சுமார் 60 ஏக்கர் நிலத்துக்கான அனுமதியை உடனடியாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் வருவாய்துறைக்கு கணிசமான வருவாய் கிடைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவுகள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், தமிழகத்துக்கு மேலும் பல புதிய முதலீடுகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. சில மாநிலங்களில் மட்டுமே தொழில்துறை அனுமதிகள் விரைவாக கொடுக்கப்படும் நிலையில், தமிழகம் அதில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாக மாநில வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த அனுமதிகளை வழங்க வேண்டும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளதால், தொழில்துறை அனுமதிகள் வேகமெடுத்துள்ளன என கூறப்படுகிறது. தொழில்நிறுவனங்களுக்கான நில உச்சவரம்பு சட்டத்தின் படி, தற்போது அனுமதி இல்லாமல் கூடுதலாக நிலம் வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.