×

செப்.26 முதல் காலாண்டு விடுமுறை

 

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு செப். 26 முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகளை நடத்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி சிறப்பு வகுப்பு நடத்தி, ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு பள்ளி தலைமையாசிரியர்தான் முழுப் பொறுப்பு என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.