×

புழல் சிறை கைதி அடித்துக் கொலை! 6 நாட்களில் நடந்தது என்ன?- கைக்குழந்தையுடன் கதறும் மனைவி

 

புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த நிலையில், போலீசாருடன், உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை புழல் சிறை விசாரணை கைதி புனிதன்(29)திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தொடர்ந்து உளறிக் கொண்டே இருந்த புனிதன் நேற்று மயக்கமடைந்தார். உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, அவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழிப்பறி வழக்கு தொடர்பாக கடந்த 13 ஆம் தேதி தாம்பரம் அடுத்த சங்கர் நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். புனிதன் இறந்த தகவல் அறிந்த உறவினர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


கைது செய்யும் போதே தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறிய, புனிதனை மருத்துவமனையில் சேர்க்காமல் ஏன் சிறையில் அடைத்தீர்கள் என போலீசாரிடம், புனிதனின் உறவினர்கள் கேள்வி எழுப்பினர். வண்ணாரப்பேட்டை மற்றும் தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளர்கள் புனிதனின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.