×

புஸ்ஸி ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர் தலைமறைவு

 

கரூர் த.வெ.க. மாவட்ட செயலாளர் தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கரூரில் நேற்று இரவு நடந்த நடிகர் விஜய் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கரூர் த.வெ.க. மாவட்ட செயலாளர் மதியழகன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் மதியழகன் தலைமறைவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எங்கிருக்கிறார்? என்றும் எந்த தகவலும் இல்லை.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழக்க காரணம் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றமற்ற கொலை செய்ய முயற்சி, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை உள்ளிட்ட பிரிவுகளில் புஸ்ஸி ஆனந்த் மீது போடப்பட்ட வழக்குகள் ஜாமீனில் வெளிவர முடியாதவையாகும்.