புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல்
கரூர் தவெக பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கரூர் துயரச் சம்பவம் பூதாகரமாக வெடிக்க, தமிழ்நாடு அரசின் சார்பில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்பட 4 பேர் மீது கரூர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மதியழகன் கைது செய்யப்பட்ட நிலையில், புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இருவரது முன் ஜாமீன் மனுக்களையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமாரை கைது செய்ய 5 தனிப்படை விரைந்துள்ளன.
இந்நிலையில் கரூர் தவெக பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.