☰
×

'முதல்வருக்கு அரோகரா'- வருத்தம் தெரிவித்தார் புஷ்பவனம் குப்புசாமி 

 

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வுக்கு பாடகர் புஷ்பவனம் குப்புசாமி வருத்தம் தெரிவித்தார். 

திருச்செந்தூர் திருக்கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம் பெருவிழாவில், முருகப்பெருமானுக்குப் போற்றிப் பாட வேண்டிய ‘அரோகரா’ முழக்கத்தைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு ‘அரோகரா’, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஸ்க்கு ‘அரோகரா’ என பாடியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இறைவனை வழிபட வந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், வழிபாட்டு மரபுகளை மீறி ஆட்சியாளர்களுக்குத் துதிபாடியிருப்பது கோடிக்கணக்கான முருக பக்தர்களை புண்படுத்தும் செயல் என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, "திருச்செந்தூர் மேடையில் முதலமைச்சருக்கு அரோகரா என நான் பாடவில்லை.  வேறொருவர் பாடிவிட்டார். முதலமைச்சரைப் போல் முருகனிடம் வேண்டினால் வெற்றிக் கிடைக்கும் என்றே பாடினேன். உங்களை பாதித்திருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன், இனி கவனமாக இருக்கிறேன்" எனக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.