×

நெல் ஈரமாக இருந்தாலும் கொள்முதல் செய்யப்படும் : அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, சென்னை மட்டுமில்லாமல் திருவாரூர், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பல இடங்களில் கோடைக்கால நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. திருவாரூர் அருகே 3 நாட்களாக பெய்த கனமழையால் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் வேதனையில் இருக்கின்றனர். நீரில் சாய்ந்த நெற்பயிர்களை காப்பாற்ற வயல்களில் தேங்கி
 

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, சென்னை மட்டுமில்லாமல் திருவாரூர், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பல இடங்களில் கோடைக்கால நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. திருவாரூர் அருகே 3 நாட்களாக பெய்த கனமழையால் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் வேதனையில் இருக்கின்றனர். நீரில் சாய்ந்த நெற்பயிர்களை காப்பாற்ற வயல்களில் தேங்கி இருக்கும் தண்ணீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

அதே போல பல இடங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால், அரசு நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யுமா? என்ற கேள்வியுடன் விவசாயிகள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர். அதனால் விவசாயிகளின் நலனையும் வாழ்க்கையையும் உரிய நேரத்தில் காப்பாற்றுங்கள் என மு.க ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் நெல் ஈரமாக இருந்தாலும் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.