#BREAKING ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் - தமிழக அரசின் திட்டமிடல் சரியா?
தமிழ்நாட்டில் மின்வெட்டை சமாளிக்க தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்கிறது தவெக அரசு.
மின் வெட்டை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை சராசரியாக ரூ.35-க்கு தமிழக அரசு கொள்முதல் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அதிகரிக்கும் மின்தேவையை சமாளிக்கும் வகையில் வெளிச்சந்தையில் 45,000 மெகாவாட் மின் கொள்முதலுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளடு. வரும் 31-ஆம் தேதி வரை மின்சாரம் கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
மின்சாரத் தேவை அதிகரிக்கும்போது வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால், எந்த விலையில் வாங்குகிறோம், அந்த விலையை ஏன் தேர்ந்தெடுத்தோம், குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தோமா என்பதுதான் அரசாங்கத்தின் நிர்வாகத் திறமைக்கான கேள்வி. திமுக ஆட்சியில் அதிகபட்சமாக Peak Hours மின்சார கொள்முதல் விலையே - 9.50 ரூபாய் தான். ஆனால் இன்று ஒரு யூனிட் மின்சாரம் 35.00 ரூபாய் கொடுத்து வாங்கபடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு தமிழ்நாடு அரசுக்கு 10.25 கோடி நஷ்டம் என சொல்லப்படுகிறது.