×

“தொகுதி பங்கீடுகாக இபிஎஸ் டெல்லியில் தெரு தெருவாக அலைகிறார்”- புகழேந்தி

 

டெல்லியில் தொகுதி பங்கீடுகாக பழனிச்சாமி தெரு தெருவாக அலைகிறார், திமுகவோ இங்கேயே பேசி முடித்துள்ளனர் என புகழேந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த  புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நாங்கள் போற்றி வணங்குகின்ற பெரியார் அறிஞர் அண்ணா எம்ஜிஆர் வாழவைத்த தெய்வம் அம்மா அவர்களின் ஆசியோடு புரட்சிகர அண்ணா திமுக கட்சியை தூக்கி வைத்துள்ளோம். நாள்தோறும் தொண்டர்கள் எங்கே செல்லலாம் என்ன பண்ணலாம் என எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருந்தார்கள். புரட்சித்தலைவி அம்மாவுக்கு பிணை பெற்று கொடுத்தோம் வழக்கில் உடனே இருந்தோம் பழனிச்சாமி என் மீது தேச துரோக வழக்கு தொடுத்தார் ஆனால் என் குடும்பமும் திராவிட பாரம்பரிய குடும்பம். மத சார்பற்ற கொள்கை கொண்டவர்கள் நாங்கள். ஆனால் பழனிசாமியோ பாஜக கட்சியுடன் கூட்டு  சேர்ந்து விட்டார். நான் மற்றொரு பெயரை கூட சொல்ல விரும்பவில்லை. ஆனால் திமுகவை நாங்கள் விமர்சிக்க முடியாது, அவர்கள் இயக்கத்துக்கு முன்னால் அமைச்சர்கள் வந்தால் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் மூன்று முறை அம்மாவால் முதலமைச்சராக்கப்பட்டவர் அவர் படத்தை அகற்றுகிறார் 


திமுகவுக்கும் விஜய்க்கும் போட்டி என நான் தான் முதலில் சொன்னேன். பழனிச்சாமியை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் வரை நான் ஓயமாட்டேன். தற்போது தேர்தலுக்கு நேரம் குறைவாக உள்ளது. யாரை நிறுத்துவது எப்படி நிறுத்துவது என முடிவெடுக்க நேரம் குறைவாக உள்ளது, பொதுக்குழு கூட்டி முடிவு எடுப்போம், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேர்தல் ஆணையம் அனுமதிக்காக காத்திருந்தோம். இப்போதுதான் கடைசியாக கட்டத்தை எட்டி உள்ளது, நாங்கள் மன்னாரன் கம்பெனி ஒன்றும் ஆரம்பிக்கவில்லை. புரட்சி என்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் குறிக்கும் புரட்சி என்றால் புரட்சித்தலைவி அம்மாவை கூட குறிக்கும். பழனிச்சாமிக்கும் எனக்கும் தான் போட்டி. இதில் வேறு யாருக்கும் போட்டி அல்ல, தமிழக முதல்வர் ஓய்வு எடுக்கலாம், விஜய்யும் பேச வேண்டிய அவசியம் இல்லை நானே பார்த்துக்கொள்கிறேன். துரோகம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது துரோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் விடமாட்டோம்,  மற்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்து என்னை ஆதரித்தாக்   எடப்பாடி பழனிச்சாமிக்கு  எதிராக நின்று வெற்றி பெற தயார். தனித்து போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அப்படியும் போட்டியிடுவேன். 


பிஜேபியை எதிர்க்கும் அதிமுக தொண்டர்களை புரட்சிகர அண்ணா திமுக வரவேற்கும். மதசார்புள்ள கட்சிகளுக்கு எதிரான கட்சியாக விளங்கும் அதிமுகவே பொதுச்செயலாளர் இருந்த ஜெயலலிதா இருந்தபோது இங்கிருந்தே அரசியல் செய்தார். அதேபோல் தான் இப்போது திமுகவும் இங்கிருந்து அரசியல் செய்து அரசியல் செய்கிறார்கள். ஆனால் பழனிச்சாமி தெருத்தெருவாக அலைகிறார். டெல்லியில் தொகுதி பங்கீடுகாக  டெல்லியில் தெருத் தெருவாக அலைகிறார். நான் தான் அதிமுக, என் தலைமையில் தான் பேச்சுவார்த்தை  நடக்கும் என கூற பழனிச்சாமிக்கு யோகிதை உண்டா? அந்த நிலை மாற்றப்பட வேண்டும் மதசார்புடன்,  கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்கள் இந்த மண்ணில் கால் வைக்க  எதிர்க்கின்ற கட்சியாக இந்த கட்சி விளங்கும் அதிமுகவின் கொள்கையை விட்டு எந்நாளும் மாற மாட்டோம்” என்றார்.