×

ராஜேந்திர பாலாஜி ஜாமினில் வந்திருப்பது நல்லதல்ல- புகழேந்தி

 

கோவை தொண்டாமுத்தூரில் தேர்தலுக்கு முன் முன்னாளர் முதல்வர் கலைஞர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்தும், நாத்திகம் குறித்தும் அவதூராக பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மண்டல ஐஜி சுதாகரிடம் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி புகார் அளித்தார். 

கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகரிடம்  மனு அளித்த பின் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொண்டாமுத்தூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மற்றும் நாத்திகம் குறித்தும் தரக்குறைவான வார்த்தைகளில் பேசினார்.  அவர் மீது நடவடிக்கை எடுக்க ஐஜியிடம் மனு அளித்துள்ளேன்,  சென்னை டிஜிபிடமும் மனு அளிக்க வலியுறுத்தியுள்ளார். எனவே சென்னையிலும் மனு அளிக்க உள்ளேன். 

இவ்வளவு தரக்குறைவாக பேசும் ராஜேந்திர பாலாஜி ஜாமினில் வந்திருப்பது நல்லதல்ல, அவர் மீது நடவடிக்கை தேவை. அப்போது ஆளும் கட்சியாக அதிமுக இருந்ததால் அவர் பேசிய வார்த்தைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது திமுக ஆட்சியில் நிச்சயம் நடவடிக்கை தேவை, மிரட்டும் தோனியில் பேசும் ராஜேந்திர பாலாஜி குறித்து உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்க வேண்டும். தெரிவித்திருந்தால் ஜாமின் கிடைத்திருக்காது.  தற்போது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். இல்லையெனில் சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்வேன்” எனத்தெரிவித்தார்.