×

"என்னால எதுவும் பண்ணமுடியாதுங்க... நீங்க கோர்ட்டுக்கு போங்க.."- எம்.எல்.ஏவின் பேச்சால் மக்கள் அதிர்ச்சி

 

அரசு சார்பில் பட்டா வாங்கி தர வேண்டும் என்றும் தனி பஞ்சாயத்தாக காவேரி நகரை உயர்த்தி தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தபோது, நான் செய்ய முடியாது நீதிமன்றத்தை அணுகி உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்று கூறியதால் பொதுமக்களுக்கும் தவெக எம்எல்ஏ-விற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

"என்னால எதுவும் பண்ணமுடியாதுங்க... நீங்க கோர்ட்டுக்கு போங்க... நான் வரமுடியாதுங்க.. என்ன வேணாலும் பண்ணிக்கோங்க.."

கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி செலுத்த சென்ற த.வெ.க எம்.எல்.ஏவிடம் அரசால் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தில் விடப்பட்ட… pic.twitter.com/ZNIVRee3YP

— Polimer News (@polimernews) June 5, 2026



கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் என். சுப்ரமணியன் 11,039 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். இந்நிலையில் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி செலுத்த சென்ற த.வெ.க எம்.எல்.ஏவிடம் அரசால் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தில் விடப்பட்ட புறம்போக்கு நிலத்தில் பட்டா கேட்டு மனு அளித்தனர். அப்போது நீங்கள் நீதிமன்றத்தில் சென்று பட்டா வாங்கிக் கொள்ளுங்கள் இந்த நிலம் பிரச்சனையில் என்னிடம் வராதீர்கள் என எம்.எல்.ஏ பேசியதால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் "வெட்டிப் போட்டாலும் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.... நீங்க கோர்ட்டுக்கு போங்க... நான் வரமுடியாதுங்க.. என்ன வேணாலும் பண்ணிக்கோங்க..நாங்கள் மக்கள் பிரதிநிதி கோர்ட்டுக்கெல்லாம் வர முடியாது" எனக் கூறினார். நீங்க நல்லது செய்வீங்கணு நம்பிதான ஓட்டு போட்டோம் என மக்கள் புலம்பிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.