காணாமல் போனதாக தேடப்பட்ட குழந்தை சடலமாக மீட்பு
புதுக்கோட்டை அருகே ஒன்றரை வயது குழந்தை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள மாராயப்பட்டி பகுதியில் வசிக்கக்கூடிய மதியநல்லூரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது ஒன்றை வயது குழந்தை ராசாத்தி. ஒன்றை வயது குழந்தை ராசாத்தியை அவரது தாயார் இன்று காலை வீட்டில் விட்டுவிட்டு அருகே உள்ள கடைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த குழந்தை அவரது தாய் பின்னே சென்றதை அவரது தாய் அறியாமல் இருந்துள்ளார். பின்னர் குழந்தையின் தாய் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது குழந்தை வீட்டில் இல்லாததால் அக்கம் பக்கத்தில் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் என்று அவர் எண்ணியதாக கூறப்படுகிறது. பின்னர் நீண்ட நேரம் ஆகியும் குழந்தை வராததால் பின்னர் குழந்தையை பக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது குழந்தை இல்லாது தெரியவந்ததை தொடர்ந்து. குழந்தையை அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர். குழந்தை எங்கேயும் கிடைக்காததால் குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சடைந்துள்ளனர்.
பின்னர் குழந்தையின் கால் தடத்தை வைத்து பார்க்கும் பொழுது, அவர்களது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள களரி குளத்திலிருந்து குழந்தை ராசாத்தி சடலமாக மிதந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையை குளத்தில் இருந்து மீட்டுள்ளனர். பின்னர் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.