×

"இந்த ஆயிரம் ரூபாய் தொடர்ந்து கிடைத்தால் போதும் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள்”- அமைச்சர் ரகுபதி

 

எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே தேர்தல் அறிவிப்புகளை அறிவித்துள்ளதால் பின்னடைவு இல்லை, எங்களுக்கு முன்னடைவு தான். எங்கள் திட்டத்தைதான் காபி பேஸ்ட் பண்ணி உள்ளார். அதைத்தான் எதிரொலித்துள்ளார் அந்த திட்டம் மக்களிடம் சென்றுள்ளது. நாங்கள் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்பதை அவர் அறிவித்த திட்டங்கள் மூலம் தனது வாயால் ஒப்புக்கொண்டுள்ளார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, “எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள அறிவிப்புகள் காபி, பேஸ்ட். கடந்த தேர்தலின் போது மகளிர் உரிமைத்  தொகை வழங்கப்படும் என்று கூறினோம். அப்போது எடப்பாடி பழனிச்சாமி குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து படிப்பதை மகளிர்க்கு ஆசை வார்த்தை கூறி உரிமைத்தொகை தர போகிறோம் என்று திமுக கூறியுள்ளது என்று சொன்ன வாய்தான் எடப்பாடி பழனிச்சாமியின் வாய். அவர் இன்று பொய்பாடி பழனிச்சாமியாக மாறி இருக்கிறார். உங்களால் உரிமைத்தொகை கொடுக்க முடியாது என்று கூறியவர் இன்று 2000 ரூபாய் கொடுக்க முடியும் என்று கூறியதில் இருந்தே மகளிர்க்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எந்த அளவிற்கு மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்குள்ள வரவேற்பையும் எடுத்துக்காட்டி உள்ளது.

அன்றைய தினம் மகளிர்க்கு உரிமை தொகை கொடுக்க முடியாது என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது திராவிட மடல் ஆட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி. எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் நம்ப மாட்டார்கள். 2019 தேர்தலுக்கு முன்னால் 60 லட்சம் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய மக்களுக்கு மாதம் 2000 ரூபாய் தருகிறேன் என்று சொன்ன வாய்தான் எடப்பாடி பழனிச்சாமியின் வாய். பொய் பாடி பழனிச்சாமி 32 குடும்பங்களுக்கு ஒன்னேகால் கோடி ரூபாய் செலவில் ஒரே மாதம் மட்டும் கொடுத்தார். பின்னர் நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி தேர்தல் வந்துவிட்டது என்று கூறி அந்த தொகையையும் நிறுத்திவிட்டால் அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்து ஒரு பைசா கூட கொடுக்கவில்லை எடப்பாடி பழனிச்சாமி. அப்படி திறமை இல்லாமல் இருந்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது திறமையாக வாக்குறுதி நிறைவேற்றுவேன் என்று கூறுகிறார். மக்களுக்கு அவரைப் பற்றி நன்றாக தெரியும். மக்கள் அதை நம்ப இளிச்சவாயர்கள் அல்ல.

தற்போது கொடுக்கும் ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு தாய்மார்கள் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டு வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகையை உயர்த்து வழங்குவதும் வழங்காததும் தமிழ்நாடு முதலமைச்சர் கையில் உள்ளது. இந்த ஆயிரம் ரூபாய் தொடர்ந்து கிடைத்தால் போதும் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள், எடப்பாடி பழனிச்சாமி வந்தால் நிச்சயம் இந்த தொகையை நிறுத்தி விடுவார் என்று மக்கள் எண்ணுகின்றனர்.  எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே தேர்தல் அறிவிப்புகளை அறிவித்துள்ளதால் பின்னடைவு இல்லை, எங்களுக்கு முன்னடைவு தான். எங்கள் திட்டத்தைதான் காபி பேஸ்ட் பண்ணி உள்ளார். அதைத்தான் எதிரொலித்துள்ளார் அந்த திட்டம் மக்களிடம் சென்றுள்ளது நாங்கள் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்பதை அவர் அறிவித்த திட்டங்கள் மூலம் தனது வாயால் ஒப்புக்கொண்டுள்ளார். இது திராவிட மடல் ஆட்சி 2.0வுக்கு வரவேற்பை தருகின்ற அறிவிப்பாகத்தான் இருக்குமே தவிர எங்களைப் பொறுத்தவரை எந்த பின்னடைவும் கிடையாது. எங்கள் தலைவருக்கும் கூட்டணிக்கும் இது மிகப்பெரிய வெற்றியைத் தரும். எடப்பாடி பழனிச்சாமி சொல்றதை செய்ய மாட்டார். ஆனால் நாங்கள் சொன்னால் செய்வோம், செய்தால் சொல்வோம். தேர்தல் வரவில்லை, தேர்தல் தேதி அறிவிக்கவில்லை, எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும். இன்று அவசர அவசரமாக பந்திக்கு முந்திக்கொண்டு செல்வதைப் போல தனக்கு எடை போட்டு வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓடிப் போய் உள்ளார். ஆனால் அங்கு பந்தியே போடவில்லைம் அவர் காத்திருக்கத்தான் வேண்டும். பந்தி போட்டவுடன் நாங்கள் வந்து அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவோம்.எடப்பாடியால் எந்த நிதி நிலையையும் சரி செய்ய முடியாது, எடப்பாடியின் திறமை என்ன என்பதை மக்கள் பார்த்துவிட்டார்கள். அவரால் திறமையாக எதையும் செயல்படுத்த முடியாது. சிறந்த மாடுபிடி வீரர் என்பது மூன்று நான்கு பேர் தான் வரப்போகிறார்கள். அவர்களுக்கு வேலை கொடுப்பது சிரமமான வேலை அல்ல. அது சாத்தியமான ஒன்று” என்றார்.