×

"அமாவாசை என்பதால் கடல் சீற்றம் அதிகமா இருந்துச்சு.."- முதல்வர் பேட்டி

 

 

அமாவாசை என்பதால் கடல் சீற்றம் அதிகமா இருந்துச்சு.. மழைநீரை கடல் உள்வாங்கவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய துச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, “அமாவாசை என்பதால் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. மழைநீரை கடல் உள்வாங்காததால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மோட்டார் மூலம் மழைநீரை அகற்றும் பணி நடக்கின்றது. மழை நின்றவுடன் சில மணி நேரங்களிலேயே சரியாகிவிடும்.” என்றார்.


’ஃபெஞ்சல்’ புயல் எதிரொலியாக புதுச்சேரியில் 49 செ.மீ. அதி கனமழை பெய்து குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்த நிலையில், மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ரங்கசாமி பேட்டியளித்துள்ளது குறிப்பிடதக்கது.