×

மதுபான விலை அதிரடி உயர்வு! அரசின் நிதியை பெருக்கவேண்டிய கட்டாய சூழல்... 

 

புதுச்சேரியில் மதுபான விலை உயர்ந்தது.‌ இன்று முதல் அமலுக்கு வந்தது. சாதாரண குவார்ட்டர் மது பாட்டிலுக்கு ரூ.6 முதல் உயர் ரக பாட்டிலுக்கு ரூ.30 வரை விலை உயர்கிறது. 750 மிலி கொண்டு முழு பாட்டிலுக்கு ரூ.24 முதல் ரூ.120 வரை விலை உயர்கிறது. 

 

புதுச்சேரியில் கடந்த மார்ச்சில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த நலத்திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு கூடுதலாக சுமார் ரூ.500 கோடி தேவைப்படுகிறது. ஆனால் இதற்கான நிதி அரசிடம் இல்லை. இதனால் அரசின் வருவாயை பெருக்க வேண்டிய கட்டாய சூழல் எழுந்துள்ளது. இதையடுத்து முதல்அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் புதுவை மக்களுக்கு சுமையின்றி, அரசின் வருவாயை பெருக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி மது வகைகளுக்கு கலால்வரி, மதுக்கடைகளுக்கு உரிம கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு, ஆகியவற்றை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

தற்போது மதுபானங்களுக்கான கூடுதல் கலால் வரி விதிப்பு குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சாதாரண குவார்ட்டர் மது பாட்டிலுக்கு ரூ.6 முதல் உயர் ரக பாட்டிலுக்கு ரூ.30 வரை விலை உயர்கிறது. 750 மிலி கொண்டு முழு பாட்டிலுக்கு ரூ.24 முதல் ரூ.120 வரை விலை உயர்கிறது.  பீருக்கான விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்கிறது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வு ஒவ்வொரு பிராண்டிற்கு தகுந்தபடி கணக்கிடப்படும்.