தொடர் மழையால் வெள்ளக்காடான புதுச்சேரி- தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல்
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்த நிலையில், அங்கு தொடர் மழை பெய்துவருகிறது. அத்தியாவசிய தேவைக்கு வெளியே வர முடியாமல் மக்கள் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்கள்
1. தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்த்து, வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
2. பலவீனமான அல்லது பாதுகாப்பற்ற வீடுகளில் வசிப்பவர்கள், அருகிலுள்ள பாதுகாப்பு நிவாரண முகாம்களுக்குத் தாமதமின்றிச் செல்ல வேண்டும்.
3. கடற்கரை, நீர்நிலைகள், வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதிகள், ஆற்றங்கரைகள் ஆகியவற்றுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
4. ஆபத்தான இடங்களில் புகைப்படம் அல்லது செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
5. மின்கம்பங்கள், மின்சாரக் கம்பிகள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைத் தொடக்கூடாது. அவற்றைக் கண்டால் மின்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
6. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.