×

புதுச்சேரியில் 30 தொகுதி - 294 பேர் போட்டி

 

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் மனு பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுக மற்றும் லஜக தலா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்16, திமுக கூட்டணி 14 தொகுதியிலும் போட்டியிடுகிறது. தமிழக வெற்றிக்கழகம் 28 தொகுதி, இந்த கூட்டணியில் உள்ள  நேயம் மக்கள் கழகம் 2 தொகுயிலும், நாம் தமிழர் கட்சி தனித்து 28 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. புதுச்சேரிக்கு இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தனியாக 3 தொகுதியில் போட்டியிடுகிறது.


இந்நிலையில் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் மனு பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, புதுச்சேரியின் 30 சட்டமன்ற தொகுதிகளில் 442 வேட்பாளர்கள் 514 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் 365 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. இன்று காங்., தேமுதிக, விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் சுயேட்சைகள் என  71 வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக 30 தொகுதிகளில் 294 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக உழவர்கரை, நெட்டப்பாக்கம், நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை தொகுதியில் 14பேரும், குறைந்தபட்சமாக ஊசுடு தொகுதியில் 5 பேரும் போட்டியிடுகின்றனர்.