×

சிதம்பரம் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி!

சிதம்பரம் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா திருவிழா இரண்டும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஆருத்ரா தரிசனம் வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 31 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. நடராஜர் கோயிலில் தேரோட்டம்
 

சிதம்பரம் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா திருவிழா இரண்டும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஆருத்ரா தரிசனம் வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 31 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. நடராஜர் கோயிலில் தேரோட்டம் 29 ஆம் தேதியும், 30 ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் ஆரூத்ரா தரிசனத்திற்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை எனவும் தெரிவித்தது. நாளை முதல் 31 வரை கொரோனா அறிகுறி இல்லாதவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையும், 4.30 மணி முதல் 5.30 மணி வரையும், 6 முதல் 7 மணி வரையும் தலா 200 பக்தர்கள் வீதம் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.