10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான வினா வங்கி புத்தகங்கள் வெளியீடு!!
Dec 20, 2023, 14:53 IST
10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான வினாவங்கி புத்தகங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று எனது தலைமையில் @tnschoolsedu கீழ் இயங்கும் பல்வேறு இயக்ககங்களின் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்டப் பள்ளிக் கல்வித்துறை பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மேம்பாடு, அதன் தற்போதைய நிலை, விலையில்லாக் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.