×

அதிரடியாக உயரப்போகும் பேருந்து கட்டணங்கள்... பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு

 

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் போக்குவரத்து துறை கருத்து கேட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு பேருந்து கட்டணம் கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ கருத்துக்களை தெரிவிக்கலாம் என போக்குவரத்து துறை கேட்டுகொண்டுள்ளது.

தமிழகத்தில் டீசல் விலை ஏற்றத்தால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பை சந்தித்து வரும் நிலையில், நிதி ஆதாரத்தை திரட்ட ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.