×

தக்காளி விலையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் போட்டி - மத்திய அரசு

 

தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் புதுமையான யோசனைகளை தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. உற்பத்தி குறைவு மற்றும் பருவமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.80லிருந்து ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக விலை குறைந்தது. இதனிடையே நேற்று மீண்டும் உயர்ந்து ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் தக்காளி விலை மேலும் 15 ரூபாய் உயர்ந்து தற்போது ரூ. 90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

 


தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் புதுமையான யோசனைகளை தெரிவிக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக டெல்லியில் 'தக்காளி கிராண்ட் சேலஞ்ச் கேக்கத்தான்' போட்டி ஒன்றையும் நடத்த உள்ளதாக மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித்சிங் தெரிவித்துள்ளார்.