இடைத்தேர்தலையொட்டி மதுராந்தகம், தாராபுரத்திற்கு நாளை பொதுவிடுமுறை
இடைத்தேர்தலையொட்டி மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில், வரும், 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. 9ம் தேதி ஒட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில் இந்த இரு தொகுதிகளுக்குட்பட்ட அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு நாளை நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டமன்ற தொகுதிகளான 35. மதுராந்தகம் (SC), 101. தாராபுரம் (SC) ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடைபெறும் 06.10.2026 செவ்வாய்க்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு & திருப்பூர் மாவட்டங்களில், மேற்கண்ட தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்படும். மேலும், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பணிபுரியும், மேற்கண்ட தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.