×

மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இன்று முதல் மீண்டும் தொடக்கம்!

நிவர் புயலால் ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வில் முதல் மூன்று நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடந்தது. அதன்பின் கடந்த 21 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின்
 

நிவர் புயலால் ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வில் முதல் மூன்று நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடந்தது. அதன்பின் கடந்த 21 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் என கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக கடந்த 24 ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு இன்று ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இன்று முதல் டிசம்பர் 10 வரை சென்னையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. ஏற்கனவே 7.5 உள்ஒதுக்கீடு இடங்களுக்கும், சிறப்பு பிரிவினருக்கும் கலந்தாய்வு நடந்து முடிந்தது. மேலும் விவரங்களுக்கு www.tnmedicalselection.org மற்றும் www.tnhealth.tn. gov.in என்ற இணையதளத்திலும் அறியலாம்.