ஓட்டுக்கு பணம் கொடுக்காத, பொய்ப் பிரச்சாரம் செய்யாத வேட்பாளரிடம் தோற்றதில் மகிழ்ச்சி- பிடிஆர்
ஓட்டுக்கு பணம் கொடுக்காத, பொய்ப் பிரச்சாரம் செய்யாத வேட்பாளரிடம் தோற்றதில் மகிழ்ச்சி என முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு எடுக்கப்போவதாக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். பொதுச்சேவை மீதும், சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் சற்றும் குறையவில்லை. மீண்டும் வருவேன் - புதிய ஆற்றலோடும், புத்துணர்ச்சியோடும் என்றும் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ஓட்டுக்கு பணம் கொடுக்காத, பொய்ப் பிரச்சாரம் செய்யாத வேட்பாளரிடம் தோற்றதிலும், ஓட்டுக்கு ரூ.1000 வழங்கிய வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்ததிலும் எனக்கு மகிழ்ச்சியே என மதுரை மத்திய தொகுதியில் தவெக வேட்பாளர் முஸ்தபா வென்ற நிலையில், அந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் பிடிஆர் பதிவிட்டுள்ளார்.