×

விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்? த்ரிஷாவுக்கு தான் தெரியும்- பி.டி.செல்வகுமார்

 

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்? என நடிகை திரிஷாவிடம் கேட்டால் தான் தெரியும் என்று தூத்துக்குடியில் விஜயின் முன்னாள் மேலாளர் தற்போது திமுகவில் இணைந்துள்ள பி.டி செல்வகுமார் தெரிவித்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு ஆடு குட்டி மட்டும் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தவெக தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரும் தற்போது திமுக நிர்வாகியுமான பி.டி.செல்வகுமார், வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக வெற்றி கழகத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்றும், விஜய்யை சுற்றி இருப்பவர்களுக்கு பணமே முக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்தார். கட்சியில் புதிதாக இணைந்தவர்களை முன்னிலைப்படுத்தி, பழைய உழைப்பாளர்களை ஓரம் கட்டுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் விஜய் மீது தற்போது தமிழகம் முழுவதும் 20 மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் பொங்கலுக்குப் பின் திமுகவில் இணையும் விழா நடைபெறும் என்றும் கூறினார். “விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்?” என்ற கேள்விக்கு, “அதை நடிகை திரிஷாவிடம் கேட்டால் தெரியும்” என்றார். மேலும், மக்கள் நலத்திட்டங்களில் அக்கறை காட்டாத விஜய் அரசியலில் மாயை உலகில் இருப்பதாகவும், கட்சியில் வசூல் வேட்டை நடக்கிறது என்றும் பி.டி.செல்வகுமார் குற்றம்சாட்டினார்.