×

நமது அரசுப் பள்ளி மாணவி நிகர் ஷாஜி -  அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் 

 

நமது அரசுப் பள்ளி மாணவி நிகர் ஷாஜி அவர்களின் சாதனையை பெருமிதத்தோடு கொண்டாடுவோம் என்று அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். 

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா - எல்1 எனும் அதிநவீன விண்கலத்தை நேற்று முன்தினம் இஸ்ரோ விஞ்ஞானிகள்  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினர்.   சந்திரயான் திட்டங்களை போலவே ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குனராகவும் தென்காசியைச் சேர்ந்த விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றியிருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமையை தேடித் தந்துள்ளது. 

இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம் என்பது தொடர்ந்து நிரூபணமாகி கொண்டே வருகின்றது!

செங்கோட்டையில் உள்ள இராமமந்திரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற நிகர் ஷாஜி அவர்கள் #AdityaL1 திட்டத்தின் இயக்குநராக சாதனை படைத்துள்ளார்.