☰
×

#BREAKING சென்னையில் போராடிய செவிலியர்கள் வலுக்கட்டாயமாக கைது

 

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் போராடிவந்த செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். 

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறை கைது செய்தது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களில் சிலரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். முதலில் போராட்டம் நடைபெற்ற இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் டார்ச் லைட் வெளிச்சத்தில் போராட்டம் தொடர்ந்தது. 4,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் காவல்துறையிடம் முறையான அனுமதி பெற்று இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். 

இந்நிலையில் போராடிய செவிலியர்கள் பேச்சுவார்த்தை என அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் சார்பில் செவிலியர்கள் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.