இன்று அமைச்சர்களுடன் மீட்டிங்; நாளை ஆர்ப்பாட்டம்... மேயர் பிரியா அதிரடி
நாளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மேயர் பிரியா ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னையின் 15 மண்டலங்களுக்கும் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து பொறுப்பு அமைச்சர்கள், மேயர் பிரியா, துணை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆய்வுக் கூட்டத்திற்கு பங்கேற்க வந்த மேயர் பிரியா மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை தவெக அமைச்சர்கள் எழுந்து நின்று வரவேற்றனர்.
இந்நிலையில் நாளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மேயர் பிரியா ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.திமுக சார்பில் நடைபெறப்போகும் இந்தப் போராட்டத்திற்கு எல் நினோ பாதிப்புகள் தொடர்பாக பருவ நிலை மாற்றத்தால் சென்னையில் எழக்கூடிய பிரச்சனைகளுக்கு தவெக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற காரணம் கூறி மேயர் பிரியா ராஜன் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். திமுக சார்பில் நடைபெறப் போகும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா உரையாற்றுகிறார்.