ஆக. 2ம் தேதி ஒகேனக்கலில் ஆர்ப்பாட்டம்- பிரேமலதா விஜயகாந்த்
Jul 20, 2026, 21:11 IST
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 2ம் தேதி ஒகேனக்கலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வருகின்ற (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணியளவில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.