×

போராட்டம் எதிரொலி- டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடல்

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் போராட்டத்தின் எதிரொலியாக டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் மூடப்படாததால், டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சீருடையுடன் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடக்கும் போதே ஊழியர்களால் டாஸ்மாக் கடை திறக்கப்பட, அங்கு கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினார். இதனால் மாணவர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்களுடன் பொதுமக்களும் களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் அணைக்கரை-  ஜெயங்கொண்டம் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் போராட்டத்தின் எதிரொலியாக டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடையை நிரந்தரமாக மூடவேண்டும் என பொதுமக்கள் பிடிவாதமாக இருந்த‌தால், கோடாலி டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்படும் என டாஸ்மாக் மேலாளர் அறிவித்துள்ளார்.