ஆளுநரை கண்டித்து போராட்டம்- கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை மீது வழக்குப்பதிவு
தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநரை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை மீது சிந்தாதிரிப்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள த.வெ.க. ஆட்சி அமைக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், அவர்களின் கைப் பாவையாக செயல்படும் கவர்னரை கண்டித்தும், சென்னை அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகே நேற்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செல்வபெருந்தகை உள்பட 251 பேர் மீது சிந்தாதிரிப்பேட்டை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.