×

போலி இமெயில் விவகாரத்தில் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு!

மாரிதாஸ் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி மிக விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மத ரீதியான பிரச்சினைகளை கிளப்பி கூடிய கருத்துக்களை தனது ஆயுதமாக பயன்படுத்தி வரும் மாரிதாஸ் சில தொலைக்காட்சி சேனல்களையும் குறிவைத்து தாக்கி வருகிறார். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய மாரிதாஸ் அதை அந்நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தனக்கு
 

மாரிதாஸ் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி மிக விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மத ரீதியான பிரச்சினைகளை கிளப்பி கூடிய கருத்துக்களை தனது ஆயுதமாக பயன்படுத்தி வரும் மாரிதாஸ் சில தொலைக்காட்சி சேனல்களையும் குறிவைத்து தாக்கி வருகிறார்.

அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய மாரிதாஸ் அதை அந்நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தனக்கு இது குறித்து இமெயில் அனுப்பியதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த சம்பவம் தனக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் இணையதளத்தில் மாரிதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்

 


இதை மறுத்த அந்நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் தான் அப்படி ஒரு மெயிலை அனுப்பவில்லை என்றும் இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிவிட்டர் பக்கத்தில் எச்சரித்தார்.

அவதூறு பரப்புவது, மோசடி கடிதம், பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுப்பது, சமூகத்தில் மோதலை உருவாக்குவதும், மத உணர்வைத் தூண்டி விடுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் புகார் ஒன்றை அளித்து இருந்தனர்.

இந்நிலையில் போலி இ மெயில் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் மீது சென்னை குற்றவியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோசடி ipc 465,469,471,it act 66 b , 43 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.