×

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு இல்லத்திற்கான மாதிரி வடிவம் வெளியீடு!

குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் பல கவிதைகளை எழுதி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை உட்பட முத்தரையர், வி.கே.பழனிசாமி கவுண்டர், ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகிய 4 பேருக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிவித்தார். அப்போது பேசிய அவர்,
 

குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் பல கவிதைகளை எழுதி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை உட்பட முத்தரையர், வி.கே.பழனிசாமி கவுண்டர், ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகிய 4 பேருக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிவித்தார்.

அப்போது பேசிய அவர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு அவரது பிறந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்று பலர் விடுத்த கோரிக்கையை ஏற்று ரூ.1 கோடி செலவில் அவரது திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே நூலகம் ஒன்றும் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த கட்டிடத்திற்கான முன்மொழியப்பட்ட மாதிரி வடிவம் வெளியாகியுள்ளது.