செஞ்சி சிறுமி வழக்கில் முன்னேற்றம்?
செஞ்சி அருகே காணாமல் போன 7 வயது சிறுமி நாமக்கலில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் செஞ்சி சிறுமி மாயமான சம்பவத்தில், தற்போது புவனகிரியில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமி காணாமல் போய் 24 நாட்களை கடந்தும், இதுவரை எந்த துப்பும் கிடைக்காத நிலையில், புவனகிரியில் அந்த சிறுமியை பார்த்ததாக ஒருவர் 100-க்கு புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் 15வது நாளாக சிபிசிஐடி விசாரணை நடத்திவரும் நிலையில், சிறுமியின் வீட்டை வில்லுப்பாட்டு குழுவினர் கடந்து சென்றதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடுப்பட்டு கிராம வில்லுப்பாட்டு குழுவினரிடம் DSP வேல்முருகன் தலைமையில் 20 பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதனிடையே செஞ்சி அருகே காணாமல் போன 7 வயது சிறுமி நாமக்கலில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். தத்தகிரி முருகன் கோயிலில் சிறுமியை போன்ற ஒருவரை வயதான தம்பதியுடன் பார்த்ததாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணை நடத்திவருகின்றனர்.