×

பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு..!!

 

சாலமன் பாப்பையா, நகைச்சுவை பேச்சாலும், இலக்கிய கருத்துக்களாலும் தற்போதைய தலைமுறைகளையும் ஈர்த்தவர்.

செப்., 5ல் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடந்தது தான், இவரது கடைசி பட்டிமன்ற நிகழ்ச்சி. அதன் பின், உடல்நலக்குறைவால் ஓய்வில் இருந்தார்.

நேற்று தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற நிலையில், மதியம் காலமானார். இவருக்கு மகன், மகள் உள்ளனர். இவரது மனைவி 2025ம் ஆண்டு காலமானார்.

சாலமன் பாப்பையா உடல், மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று (செப் 12) காலை, 10:00 மணிக்கு இறுதி ஊர்வலம் துவங்கி மதியம், 12:00 மணிக்கு உடல் தகனம் செய்யப்படுகிறது.

சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.