×

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் தயாரிப்பாளர் சங்கமித்ரா அன்புமணி 

 

அலங்கு திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாவதை முன்னிட்டு தயாரிப்பாளர் சங்கமித்ரா அன்புமணி நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா அன்புமணி சினிமாத்திறையில் களமிறங்கியுள்ளார். ’அலங்கு’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அலங்கு’. இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் இதற்கு முன்னதாக உறுமீன், பயணிகள் கவனிக்கவும் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சங்கமித்ரா தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட தனது தாயார் சௌமியா அன்புமணிக்காக சங்கமித்ரா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.