ஜனாநாயகன் படத்தின் தயாரிப்பாளர் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம்
Jun 26, 2026, 18:11 IST
ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கடா நாராயணா தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணனை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்திக்கும் போது விஜயுடன் வெங்கட நாராயணன் உடன் சென்று இருந்தார். இவர் கடைசியாக ஜோசப் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளராவார். அவர் பொறுப்பேற்கும் தேதியில் இருந்து ஓராண்டு காலத்துக்கு இந்த நியமனம் அமலில் இருக்கும் என்றும் தலைமை செயலாளர் சாய்குமார் அறிவித்துள்ளார்.