அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!
ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்யும் 7 பேர் கொண்ட மாநிலக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆண்டுக்கு 10 லட்சம் மேல் வருமானம் வரும் கோயில்களில் அறங்காவலர்களை நியமனம் செய்ய மாநில குழுவை அமைத்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலையா சுவாமிகள் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் கோட் மற்றும் வெயில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் உறுப்பினராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் தனது நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் தனது ஆட்சியில் முக்கிய பொறுப்புகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் விஜயின் ஜனநாயகன் பட தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கப்பட்டது. தற்போது கோயில்களில் அறங்காவலர்களை நியமனம் செய்யும் உறுப்பினர் குழுவில் மற்றொரு தயாரிப்பாளர் இடம்பெற்றிருப்பது தமிழக அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.