×

தனியார் பள்ளிகளில் 75% கல்வி கட்டணம் வசூலித்து கொள்ள அனுமதி – தமிழக அரசு

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுளதாக கல்விக் கட்டண நிர்ணய குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தனியார்
 

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுளதாக கல்விக் கட்டண நிர்ணய குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் மூன்று தவணைகளில் 75% கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கலாம் என உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. தற்போது 25 சதவீதம், பள்ளிகள் திறக்கும் போது 25%, அடுத்த மூன்று மாதங்களுக்கு 25 சதவீதம் என வசூலிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

நடப்பு கல்வி கட்டண நிர்ணயக் குழுவுக்கு உதவி புரிய கல்வியாளர்களை அதில் சேர்க்கலாமே என்ற உயர்நீதிமன்றம் கேள்விக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு செயல்படுவதால் அதற்கு அவசியமில்லை என தமிழக அரசு பதிலளித்துள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டு கட்டணம் எவ்வளவு என்பதை கட்டண நிர்ணயக் குழு முடிவு எடுக்கும் என்றும் பள்ளி கட்டணம் தாமதமாக செலுத்தினாலும் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது என்றும் கூறியுள்ளது.

கல்வி கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்ற என்ற உத்தரவை எதிர்த்து பள்ளி கல்லூரி சங்கங்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.