☰
×

தனியார் பள்ளி மோசடி வழக்கு- அன்பில் மகேஷுக்கு நெருக்கடி

 

அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி தனியார் பள்ளிகளிடம் மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முத்துகுமாரின் உறவினர்கள் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். 

தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி  ரூ.100 கோடி மோசடி வழக்கில் தலைமறைவான முத்துக்குமாரின் உறவினர்களான சரவணன், ரமேஷ் ஆகியோரின் வீடு உட்பட 4 இடங்களில் சோதனை நடைபெற்றது. தலைமறைவான முத்துக்குமாரின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி குன்னத்தூரில் நேற்று ரெய்டு நடைபெற்றது. சோதனையில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் உட்பட 30 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர் . இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடைய 9 இடங்களில் முன்பு சோதனை நடைபெற்றது.  இவ்வழக்கில் திமுக பிரமுகர் அரசகுமார் உள்ளிட்ட இருவர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு நெருக்கடி இறுக்குகிறது.