×

ரூ.16 லட்சம் பில் போட்ட தனியார் மருத்துவமனை… அனுமதியை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி!

சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் கட்டணம் என்று கூறிவிட்டு ரூ.16 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை மீது தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை நியூ ஆவடி சாலையில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிவந்த ஒருவர் கொரோனாவுக்காக அட்மிட் ஆனார். அவரிடமிருந்து கொரோனா சிகிச்சைக்கு என்று தொடக்கத்திலேயே ரூ.5 லட்சத்தை மருத்துவமனை நிர்வாகம் வசூல் செய்தது. அவர்
 

சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் கட்டணம் என்று கூறிவிட்டு ரூ.16 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை மீது தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.


சென்னை நியூ ஆவடி சாலையில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிவந்த ஒருவர் கொரோனாவுக்காக அட்மிட் ஆனார். அவரிடமிருந்து கொரோனா சிகிச்சைக்கு என்று தொடக்கத்திலேயே ரூ.5 லட்சத்தை மருத்துவமனை நிர்வாகம் வசூல் செய்தது. அவர் டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் கூடுதலாக 11 லட்ச ரூபாயைக் கட்டச் சொன்னதால் பிரச்னை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தினர்.
மருத்துவமனையின் அடாவடி வசூல் தொடர்பான செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. மருத்துவமனை அளித்த பில் காப்பி சமூக ஊடகங்களிலும் வைரல் ஆனது. சிகிச்சையே இல்லாத கொரோனாவுக்கு தினமும் பரிசோதனை செய்தோம், பாதுகாப்பு கருவிக்கு கட்டணம் என்று கூறி கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.


இதைத் தொடர்ந்து இந்த மருத்துவமனை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளது. அந்த மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்து தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பதாக சிக்கிய மருத்துவமனை சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறை இல்லை. பல முறைகேடுகள் அங்கு நடப்பதாக அவ்வப்போது புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. மக்கள் அங்கு சென்று ஏமாறுவதை தவிர்க்க மருத்துவமனைக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.