தமிழகத்தில் தனியார் பேருந்துகளின் கட்டணம் உயர்வு?
Aug 1, 2025, 18:07 IST
தமிழகத்தில் தனியார் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிபொருள், உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப பயண கட்டணத்தை உயர்த்த தனியார் பேருந்து சங்கங்கள் தொடர்ந்த வழக்கு எதிரொலியாக தமிழகத்தில் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. பேருந்து கட்டணம் உயர்வு தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நிறைவடைந்த நிலையில் ஓரிரு நாட்களில் கட்டண உயர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம்னி பேருந்துகள், மாவட்டங்களுக்கிடையே இயக்கப்படும் தனியார் பேருந்துகளுக்கு மட்டும் கட்டணம் உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகிறது. குறைந்த பயண கட்டணத்தில் மக்களுக்கான பொதுப் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.