×

தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் – அரசாணை வெளியீடு!

தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் சேவை குறித்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23லட்சத்து 53 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 267 பேர் உயிரிழந்த நிலையில் இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,547ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 25,895 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,74,247ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்
 

தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் சேவை குறித்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23லட்சத்து 53 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 267 பேர் உயிரிழந்த நிலையில் இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,547ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 25,895 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,74,247ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் சாதாரண ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூபாய் 1500 மட்டுமே வசூலிக்க வேண்டும். உயிர் காக்கும் கருவி ஆக்சிஜன் வசதி உள்ள ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கிலோ மீட்டர் ரூபாய் 2000 வசூலிக்கலாம். வென்டிலேட்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் கொண்டு ஆம்புலன்ஸ்கள் ரூபாய் 4000 வசூலிக்கலாம். 10 கிலோமீட்டர் மேலுள்ள தூரத்திற்கு சாதாரண ஆம்புலன்ஸ்கள் கிலோமீட்டருக்கு கூடுதலாக ரூபாய் 25 வசூலிக்கலாம். உயிர் காக்கும் கருவி கொண்ட ஆம்புலன்ஸ் கிலோமீட்டருக்கு கூடுதலாக ரூபாய் 50 வசூலித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.