புழல் சிறையிலிருந்து அடுத்தடுத்து கைதிகள் மாயம்
சென்னை அடுத்துள்ள புழல் மத்திய சிறையில் 24 மணி நேரத்தில் 2 கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்துள்ள புழல் மத்திய சிறையில் 24 மணி நேரத்தில் 2 கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த விசாரணை கைதி சுதீப் உள்பட தப்பியோடிய 2 பேரை பிடிக்க 14 தனிப்படைகள் அமைகக்கப்பட்டுள்ளது. தலை எண்ணிக்கையின் போது நேபாள கைதி மாயமானது தெரியவந்த நிலையில், Freedom bajar என்று சிறைக்குள் இருக்கும் கடையில் பணியாற்றியபோது மற்றொரு கைதியும் தப்பியோடியுள்ளார்.
சிறைக்குள்ளேயே கைதி காணாமல் போகும் அளவுக்கு தான் பாதுகாப்பு இருக்கிறதா? கண்காணிப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? CCTV கேமரா பதிவுகள் என்ன சொல்கின்றன? கைதி தப்பித்தாரா? இதற்குப் பின்னால் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? இதற்குப் பின்னால் இருப்பது பாதுகாப்புக் குறைபாடா, நிர்வாக அலட்சியமா, அல்லது வேறு ஏதாவது காரணமா? இது சாதாரணமாகக் கடந்து போக வேண்டிய விஷயம் இல்லை. சிறைத்துறை நிர்வாகம் வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வழியுறுத்திவருகின்றன.