☰
×

சிறை கைதி தப்பிய விவகாரம்- 3 சிறை கண்காணிப்பாளர்கள் அதிரடி இடமாற்றம்

 

தமிழக சிறைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சிறை கைதி தப்பிய விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மிகப்பெரிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைவர் சங்கர்,  நேற்று (31-10-2026) இரவு பிறப்பித்த அவசர உத்தரவால் மூன்று மத்திய சிறைகளின் கண்காணிப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு அடிப்படையாக இரண்டு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வரும் (With Immediate Effect) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மதுரை மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணராஜ், சேலம் மத்திய சிறையில் காலியாக உள்ள கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கடலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த பரசுராமன்,  R.கிருஷ்ணராஜ் மாற்றப்பட்டதால் காலியான மதுரை மத்திய சிறையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மத்திய சிறையின் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த வினோத், கடலூர் மத்திய சிறையின் கூடுதல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். இந்த மாற்றம் வெறும் பெயரளவு மாற்றம் அல்ல. பொறுப்புகளை எப்படி ஒப்படைக்க வேண்டும் என்று DGP மிகத் தெளிவாக உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணராஜ் தனது பொறுப்பை மதுரை சரக DIG முருகேசன் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.முருகேசன் அவரிடம் இருந்து பரசுராமன் மதுரை சிறையின் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.அதேபோல் வினோத், கிருஷ்ணராஜ் இடம் சேலம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். பரசுராமன், வினோத் இடம் கடலூர் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். அனைத்து அதிகாரிகளும் புதிய இடங்களில் உடனடியாக பணியில் சேர வேண்டும் (Join with immediate effect) என்றும், பொறுப்பு ஒப்படைப்பு மற்றும் ஏற்பு விதிகளின்படி கண்டிப்பாக நடக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கைதி தப்பிய சம்பவத்திற்கு பிறகு சிறைத்துறையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், நிர்வாகத்தை சரி செய்யவும் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவு நகல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலை (Acknowledgement) அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.