×

சேலம் மத்திய சிறையில் சிறை கைதி உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்த ராம்ராஜ். இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் கைதாகி சேலம் சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை ராம்ராஜுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். ராமராஜூக்கு ஏற்கெனவே இருதய கோளாறு இருந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக சேலம் மத்திய சிறையில் கடந்த
 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்த ராம்ராஜ். இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் கைதாகி சேலம் சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை ராம்ராஜுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். ராமராஜூக்கு ஏற்கெனவே இருதய கோளாறு இருந்ததாக கூறப்படுகிறது.


முன்னதாக சேலம் மத்திய சிறையில் கடந்த 22-ஆம் தேதி ஆயுள் தண்டனைக் கைதி செல்வம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.