சங்கிலியால் கட்டி தாக்கப்பட்ட கைதி! நடந்தது என்ன?- போலீஸ் விளக்கம்
கைதி ஒருவரை தாளவாடி காவல் நிலையத்தில் போலீசார் தாக்கும் வீடியோ தற்போது வெளியான நிலையில், அந்த சம்பவம் 2024ம் ஆண்டு நடந்தது என ஈரோடு மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம், தாளவாடி காவல் நிலையத்தின் ஓய்வு அறையில், மாது(எ)மகாதேவா (19) என்பவரை காவல் துறையினர் சரமாரியாக தாக்கியதாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி வீடியோவில் இடம்பெற்றுள்ள நபர் மாது (எ) மகாதேவா என்பதும், தாளவாடி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வரலாற்றுத்தாள் குற்றவாளியான அவரை கடந்த 20.09.2024-ம் தேதி குற்ற வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த 2024 ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தை மேற்படி செய்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதி ஒருவரை போலீசார் சரமாரியாக தாக்கியதாக தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இதுபோன்று ஒரு நிகழ்வு நடைபெறவில்லை என்பதை ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.