×

#Modi தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கோவையில் உற்சாக வரவேற்பு!

 

ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடக்கவிருக்கின்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு,கடந்த இரண்டு மாதங்களில் ஆறாவது முறையாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி.

இன்று தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி அவர்களை, கோவை விமான நிலையம் முதல் சாய்பாபா காலனி வரை சாலையின் இரு புறங்களிலும் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பாஜக ரோடு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

 இந்த ரோட் ஷோ பூ மார்க்கெட், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி,  டிவி சாமி சாலை வழியாக ஆர் எஸ் புரம் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் முடிவடைகிறது.

இந்த வாகனப் பேரணியில் பிரதமர் மோடி 500 மீட்டர் தூரம் சாலையில் நடந்து செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.