மார்ச் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை..
Mar 15, 2023, 08:49 IST
ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் புதிதாக ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கான முதல் கட்டடம் கட்டும் பணி நிறைவடந்துள்ளது. இதற்கான திறப்பு விழாவை வருகிற 27-ந்தேதி நடத்த விமான நிலைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடிஉ திறந்து வைக்க உள்ளதாகவும், இதற்காக அவர் வருகிற 27-ந்தேதி சென்னைக்கு வருகை தர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.